இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தீர்மானம் மிக்க ஐசிசி மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகியது.
ஆஸ்திரேலியாவும் தென் ஆப்பிரிக்காவும் உலக கிண்ண அரை இறுதிகளில் விளையாட தகுதி பெற்றுள்ள நிலையில் இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இது அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான போட்டியாக அமைந்துள்ளது.
இந்த போட்டியில் முதலில் துடிப்பெடுத்தாடும் இங்கிலாந்து அணி 42 ஓவர்களில் 225 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

