10 அணிகள் இடையிலான 18 ஆவது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனிடையே இந்தியா – பாகிஸ்தான் ஏற்பட்ட போர்ப்பதற்றம் காரணமாக ஐ.பி.எல். தொடர் ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது இந்தியா- பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கும் 58 ஆவது லீக் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதற்கான காரணம் என்னவெனில், பெங்களூருவில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. இந்த மழை நாளை வரை நீடிக்கும் என வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. இதனால் இந்த போட்டி தடையின்றி நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.