எஹெலியகொட நகரில் இன்று (15) கட்டுப்பாட்டை இழந்த சிற்றூந்து ஒன்று மேலும் பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று இரவு எஹெலியகொட நகரில் பயணித்த சிற்றூந்து ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த ஒரு உந்துருளி, மூன்று முச்சக்கரவண்டிகள் மற்றும் இரண்டு சிற்றூந்துகள் என மொத்தமாக ஆறு வாகனங்களை மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த 13 பேர் சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் எஹெலியகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

