19.5 C
Scarborough

உலக விளையாட்டு போட்டி; வில்வித்தை அரையிறுதி போட்டியில் வென்ற அமெரிக்கா

Must read

உலக விளையாட்டு போட்டி சீனாவின் செங்டு நகரில் நடந்து வருகிறது. இதில் வில்வித்தை போட்டியில் நேற்று நடந்த ஆண்கள் காம்பவுண்ட் தனிநபர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ரிஷப் யாதவ் 145-147 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவின் கர்டிஸ் லீ பிராட்னாக்சிடம் போராடி தோல்வி கண்டார்.

இதனால் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் ரிஷப் யாதவ், சக நாட்டவரான அபிஷேக் வர்மாவை சந்தித்தார். இதில் ரிஷப் 149-147 என்ற புள்ளி கணக்கில் உலகக் கோப்பை போட்டிகளில் தங்கம் வென்றவரான அபிஷேக் வர்மாவுக்கு அதிர்ச்சி அளித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

பெண்கள் காம்பவுண்ட் தனிநபர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பர்னீத் கவுர் 140-145 என்ற புள்ளி கணக்கில் அலிஜாண்ட்ரா உஸ்குயானோவிடமும் (கொலம்பியா), மதுரா தமன்கோன்கர் 145-149 என்ற புள்ளி கணக்கில் லிசெல் ஜாத்மாவிடமும் (எஸ்தோனியா) தோல்வியை தழுவினர்.

இதன் கலப்பு அணிகள் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் அபிஷேக் வர்மா- மதுரா இணை 151-154 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவின் மூன் யீன்- லீ என்ஹோ ஜோடியிடம் பணிந்தது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article