உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் டெட்ரொஸ் அதனொம் கெப்ரியசஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெறும் எட்டாவது தென்கிழக்கு ஆசிய பிராந்திய சர்வதேச சுகாதார உச்சி மாநாட்டில் பிரதம அதிதியாக பங்கேற்பதற்காக அவர் இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த மாநாடு நாளை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் தென்கிழக்கு ஆசிய பிராந்திய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார அமைச்சர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
உலக சுகாதார ஸ்தாபனத்தில் நாயகம் இன்று முற்பகல் கட்டார் விமான நிறுவனத்தின் க்யூ ஆர் 660 விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் டொக்டர் அணில் ஜாசிங்கை வரவேற்றார்.

