உக்ரைன் -ரஷியா இடையே நீடிக்கும் போரினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உக்ரைனில் பயணிகள் ரயில் மீது ரஷியா இன்று தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் சுமி மாகாணத்தில் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது ரஷியா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏற்பட்டதா’ என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
எனினும் இந்த தாக்குதலில் 30 பேர் வரையில் காயம் அடைந்துள்ளனர்என உக்ரைன் தெரிவித்துள்ளது.மேலும் இந்த தாக்குதலை உக்ரைன் தலைவர் கண்டித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதனால் இரு நாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

