எதிர்வரும் ஜூலை 1முதலாம் திகதி முதல் பஸ் சாரதிகள் வாகன இருக்கைக்கான பாதுகாப்பு பட்டியை (சீட் பெல்ட்) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவ்வாறு அணியாத சாரதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் தலைவர் பொறியாளர் பி.ஏ. சந்திரபால தெரிவித்துள்ளார்.
மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளின்படி, வாகன சாரதிகள் பாதுகாப்பு பட்டியை அணிய வேண்டும் என்ற சட்டம் அக்டோபர் 1, 2011 முதல் நடைமுறையில் உள்ளது.
இந்தச் சட்டம் வர்த்தமானி அறிவிப்பு மூலம் வெளியிடப்பட்டிருந்தாலும், பல சாரதிகள் பட்டியை அணியாததால் வீதி விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் ஜூலை 1 முதல் இந்தச் சட்டத்தை கட்டாயமாக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.