இலங்கை ரக்பி சங்கத்தின் நிர்வாக பிரச்சினை 4 மாதத்துக்குள் தீர்க்கப்பட வேண்டுமெனவும், அவ்வாறு இல்லாத பட்சத்தில் சர்வதேச போட்டிகளிலிருந்து வெளியேற்றப்படுவது உட்பட கடுமையான தடைகளை இலங்கை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் எனவும் உலக ரக்பி சம்மேளனம் எச்சரித்துள்ளது.
முக்கிய பங்குதாரர்களாக ஆசிய ரக்பி தலைவர் கயிஸ் அப்துல்லா அல் தலாய், இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் மற்றும் விளையாட்டு பணிப்பாளர் நாயகம் ஷெமால் பெர்னாண்டோ ஆகியோருக்கு கடந்த 14ஆம் திகதி அனுப்பி இருக்கும் கடிதத்தில், தற்போதைய நிலையின் தீவிரத்தை உலக ரக்பி சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதில் மறுசீரமைக்கப்பட்ட நீர்வாகக் கட்டமைப்பை செயற்படுத்தல், புதிய யாப்பு ஒன்றுக்கு அங்கீகாரம் அளிப்பது மற்றும் எதிர்வரும் ஜூன் 15 இற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று இலங்கை ரக்பி சங்கத்தை வலியுறுத்தியுள்ளது.