நாட்டின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 33,095 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெலிக்கடை சிறைச்சாலையில் மாத்திரம் 750 பேர் தங்கக்கூடிய இடத்தில் 3,557 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு மகசின் சிறையில் 625 பேர் தங்கக்கூடிய இடத்தில் 2,985 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதேநேரம் விளக்கமறியலில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பது நெரிசலை ஏற்படுத்தியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையிலும் 220 கைதிகள் தங்கக்கூடிய இடத்தில் 561 பெண் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அதிகளவான கைதுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.