இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை கொல்லமுன்ன பிரதேசத்தில் வசிக்கும் அஷேன் பண்டார, மற்றொரு நபரின் வீட்டினுள் புகுந்து தாக்குதல் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
அஷேன் பண்டார தனது வீட்டுக்கு அருகிலுள்ள ஒருவருடன், வீதியை மறிக்கும் வகையில் காரை நிறுத்தியதற்கு பிறகு, ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அஷேன் பண்டார, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்.