இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையில் ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது ரி20 போட்டியில் இங்கிலாந்து அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர் தோல்வியிலிருந்து தப்பித்தது.
முன்னதாக நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று முன்னிலை வகித்த நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 170 ஓட்டங்களை குவித்தது.
171 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களில் 145 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. 05 போட்டிகள் கொண்ட தொடரை வெல்ல இரு அணிகளும் ஆர்வமாக உள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகள் மிகவும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. நான்காவது போட்டி நாளை (31) புனேவில் நடைபெறவுள்ளது.