இந்தோனேசியாவில் உள்ள மதப் பள்ளி ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 36 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியா நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோர்ஜா நகரில் அல்கோசின் இஸ்லாமிய மத பள்ளி உள்ளது.
இந்த மதப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதம் சார்ந்து கற்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் கடந்த திங்கட்கிழமை மதியம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வழிபாடு செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பள்ளியின் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.
இதனால் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதனை அடுத்து மீட்பு பணியினர் மீட்பு பணியில் ஈடுபட்டதுடன் கடந்த ஐந்து நாட்களாக மீட்பு பணிகள் தொடர்ந்து இடம் பெற்றது.
இந்நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 36 ஆக அதிகரித்துள்ளது.
இதேசமயம் இடிப்பாடுகளில் சிக்கிய 104 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

