12.8 C
Scarborough

இந்தியா, அசாம் மாநிலத்தில் ஒரே மாதத்துக்குள் அடுத்தடுத்த நிலநடுக்கம் பதிவு

Must read

இந்தியாவின் வடக்கு பகுதியான அசாம் மாநிலத்தில் இன்று மாலை 4:41 மணிக்கு 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் வடக்கு பங்களாதேஷ் மற்றும் அண்டை நாடான பூட்டான் வரை உணரப்பட்டுள்ளது.

இதன் மையப்பகுதி உதல்குரி மாவட்டத்தில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தின் ஆழம் 5 கி.மீ. என தெரியவந்துளளது.

எனினும் இதுவரை காயம் அல்லது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் பதிவாகவில்லை.

செப்டம்பர் 2 ஆம் திகதி அசாமில் உள்ள சோனித்பூரில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article