இந்திய பிரதமர் மோடி இன்று முதல் வருகிற 14ஆந் திகதி வரை பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று(10) முதல் வருகிற 12ஆம் திகதி வரை செயற்கை நுண்ணறிவு மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக பிரதமர் மோடி இன்று பிற்பகல் டெல்லியில் இருந்து புறப்பட்டு பிரான்ஸ் செல்கிறார்.
இன்று இரவு பிரான்ஸ் சென்றடையும் பிரதமர் மோடி, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்கிறார். பின்னர், நாளை (11) இடம்பெறவிருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த உச்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி மேக்ரானுடன் இணைந்து தலைமை தாங்குகிறார்.