5.1 C
Scarborough

ஆப்கான் உடனான தொடரை வென்ற பங்களாதேஷ்

Must read

பங்களாதேஷ் – ஆப்கானிஸ்தான் இடையிலான தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் நடைபெற்று வரும் டி20 தொடரில் முதல் போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 147 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக இப்ராகிம் சட்ரான் 38 ஓட்டங்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் நகம் அகமது, ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பங்களாதேஷ் அணி 19.1 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 150 ஓட்டங்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என பங்களாதேஷ் கைப்பற்றியது.

பங்களாதேஷ் தரப்பில் அதிகபட்சமாக ஷமிம் ஹொசைன் 33 ஓட்டங்கள் எடுத்தார். இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடக்கிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article