ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரராக சுவீடனின் கோலூன்றிப் பாய்தல் வீரரான மொன்டோ டுப்லான்டிஸும், சிறந்த வீராங்கனையாக ஐக்கிய அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான சிமோன் பைல்ஸும் செவ்வாய்க்கிழமை (22) தெரிவாகியுள்ளனர்.
உசைன் போல்டுக்கு அடுத்ததாக இவ்விருதை வெல்லும் இரண்டாவது தடகளவீரர் டுப்லான்டிஸ் ஆவார்.
மிகவும் ஆபத்தான காயங்களிலிருந்து மீண்டு பரிஸில் தங்கப் பதக்கம் வென்ற பிரேஸிலிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை றிபெக்கா அன்ட்ரேட் ஆண்டின் சிறந்த மீள்வருகையாக தெரிவாகினார்.
சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்தியதாக ஸ்பெய்னின் கால்பந்தாட்ட வீரரான லமீன் யமால் தெரிவானார்.