கொழும்பில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கும் ஆசிய ரக்பி செவன்ஸின் இரண்டாவது லீக் போட்டிக்கு மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் பெண்கள் பிரிவுகளில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் உள்ளூர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வாய்ப்புள்ளது என விளையான்ட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஜப்பான், சீனா, ஹாங்காங், சீனா, தாய்லாந்து, கஜகஸ்தான், இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகியவை நாடுகள் இந்த போட்டிகளில் பங்கேற்கின்றன.
இலங்கை பெண்கள் அணியில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் செயின்ட் தாமஸ் கல்லூரியின் முன்னாள் ஃப்ளை-ஹாஃப் (ரஃபி வீராங்கனை) கிமந்தா ஜெயசிங்கவின் மகள்களான இரண்டு சகோதரிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் இலங்கை ஆண்கள் அணியில் கயான் பெரேரா, கவிந்து பெரேரா, கலனா சாமுதிதா, ஆகாஷ் மதுஷங்கா, தினல் ஏகநாயக்க, யேஹான் புலத்சிங்கலகே, ஹேஷான் ஜான்சன், திலுக்ஷா டாங்கே, ஜனிந்து தில்ஷான், சதுரா சொய்சா, ஸ்ரீநாத் சூரியபண்டார, சுரங்க தென்னகோன், தஷானா தபாரே, முகமது ரிஃபான், கெமோட் பெர்னாண்டோ ஆகியோர் அடங்கியுள்ளனர்.

