19.5 C
Scarborough

அரையிறுதி போட்டிக்கு முதன் முறை முன்னேறிய இந்திய சர்ஃபிங் போட்டியாளர்கள்

Must read

ஆசிய சர்ஃபிங் கூட்டமைப்பு சார்பில் ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டி மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது.

இதன் 5-வது நாளான நேற்று ஆடவர் ஓபன் பிரிவில் இந்தியாவின் ரமேஷ் புடிஹால் 11 புள்ளிகள் குவித்து ஹீட் 2-ல் 2-வது இடம் பிடித்து கால் இறுதிக்கு முன்னேறினார். ஹீட் 7-ல் இந்தியாவின் கிஷோர் குமார் 10.14 புள்ளிகளை குவித்து 2-வது இடமும், ஹீட் 8-ல் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 8.90 புள்ளிகளை குவித்து 2-வது இடமும் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

18 வயதுக்குட்பட்ட சிறு​வர் பிரி​வில், இந்​தி​யா​வின் பி.ஹரிஷ் ஹீட் 5-ல் 9.50 புள்​ளி​களை குவித்து 2-வது இடம் பிடித்து கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். அதேவேளை​யில் இந்​தி​யா​வின் தைன் அருண், பிரஹ்லாத் ​ராம் ஆகியோர் வெளி​யேறினர். 18 வயதுக்​குட்​பட்ட சிறுமியர் பிரி​வின் 2-வது சுற்​றில் (ரெப்​பேஜ்) இந்​தி​யா​வின் ஆத்யா சிங், தமயந்தி ​ராம் ஆகியோர் 3-வது சுற்​றுக்கு முன்​னேறினர்​.

இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் ஓபன் ஆண்கள் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய சர்ஃபர்களான ரமேஷ் புடிஹல் மற்றும் கிஷோர் குமார் ஆகியோர் அரையிறுதிக்கு தெரிவான முதல் இந்தியர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article