16.6 C
Scarborough

அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்க திட்டம்?

Must read

வர்த்தக வரி விதிப்பு தொடர்​பாக 12 நாடு​களுக்​கான உத்​தர​வில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்​திட்​டுள்​ளார். எந்​தெந்த நாடு​கள் என்ற விவரம் நாளை வெளி​யிடப்​படும் என்​றும் தெரி​வித்​துள்​ளார். இந்​தி​யா உட​னான ஒப்​பந்​தம் கையெழுத்​தா​காத நிலை​யில், மேலதிக வரி விதிக்​கப்​பட்​டால் பதில் வரி விதிக்க இந்திய மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக 2-வது முறை​யாக கடந்த ஜனவரி 20-ம் திகதி டொனால்ட் ட்ரம்ப் பொறுப்​பேற்​றார். அமெரிக்கா​வுக்கு, இந்​தியா உட்பட உலக நாடு​கள் தங்​கள் நாட்டு பொருட்​களுக்கு அதிக வர்த்தக வரி விதிப்​ப​தாக தெரி​வித்​தார்.

இதற்கு பதிலடி​யாக பரஸ்பர வரி விதிக்​கப்​படும் என அறி​வித்த அவர், கடந்த ஏப்​ரல் 2-ம் திகதி அதற்​கான பட்​டியலை​யும் வெளி​யிட்​டார். இதில் இந்​திய பொருட்​களுக்கு 26% வரி விதிக்​கப்​படும் என கூறப்​பட்​டிருந்​தது.

எனினும், இந்​தியா உள்​ளிட்ட சில நாடு​கள் பேச்​சு​வார்த்தை நடத்த முன்​வந்​தன. இதையடுத்​து, இடைக்​கால ஒப்​பந்​தம் ஏற்​படுத்​திக் கொள்ள ஏது​வாக பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்​களுக்கு நிறுத்தி வைத்​தார் ட்ரம்ப். இதையடுத்​து, அமெரிக்கா​வுடன் பல நாடு​கள் பேச்​சு​வார்த்தை நடத்தி வந்​தன. 90 நாள் காலக்​கெடு எதிர்வரும் 9-ம் திகதி நிறைய​வடைய உள்ள நிலை​யில், பிரிட்​டன், வியட்​நாம் ஆகிய 2 நாடு​களு​டன் மட்​டுமே அமெரிக்கா வரி விதிப்பு தொடர்​பாக ஒப்​பந்​தம் செய்​து​கொண்​டுள்​ளது.

இந்நிலையில் இந்தியா தமது பொருட்களுக்கும் பதில் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article