பிரபல அமெரிக்க ஓட்டப்பந்தய வீராங்கனையான ஷா’காரி ரிச்சர்ட்சன், தனது காதலன் கிறிஸ்டியன் கோல்மேனுடன் அடிதடி சண்டையில் ஈடுபட்டதாகக் கூறி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இந்த சண்டை கெமராவில் பதிவானதாக கூறப்படுகிறது, மேலும் ரிச்சர்ட்சன் மீது வீட்டு வன்முறை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இந்த சம்பவம் இடம்பெற்ற சில நாட்களுக்குப் முன்னர் ரிச்சர்ட்சன் அமெரிக்காவின் டிராக் அண்ட் ஃபீல்ட் சம்பியன்ஷிப்பில் டிராக் போட்டி ஒன்றில் பங்கேற்றார்.
அமெரிக்காவின் டிராக் அண்ட் ஃபீல்டுக்கான நிர்வாகக் குழு நிலைமையை அறிந்திருக்கிற போதிலும் அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
கெமரா காட்சிகளை ஆய்வு செய்த அதிகாரி, ரிச்சர்ட்சன் தனது இடது கையை நீட்டி கோல்மேனின் பையைப் பிடித்து இழுத்துச் செல்வதைக் கவனித்ததாகக் கூறினார்.
அத்துடன் அதிகாரிகள், “கோல்மேன் விசாரணையில் மேலும் பங்கேற்க விரும்பவில்லை என்றும், பாதிக்கப்பட்டவராக இருக்க மறுத்துவிட்டார் என்றும் தெரிவித்துள்ளனர்.
நடப்பு சாம்பியனாக ரிச்சர்ட்சன் செப்டம்பரில் டோக்கியோவில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப்பில் இருந்து தானாகவே விடைபெற்றுள்ளார் என கூறப்படுகிறது.