16.6 C
Scarborough

அதிகாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு-சிறுமி ஒருவரும் பாதிப்பு

Must read

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளம் பெண் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் மூவரும் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய தாய், அவரது 12 வயது மகள் மற்றும் 44 வயதுடைய மற்றொரு நபர் ஆகியோரே இவ்வாறு காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பிஸ்டல் வகை துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article