ரஜினி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த வாரம் திரைக்கு வந்த படம் கூலி. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தனர்.
தமிழ் சினிமாவின் முதல் ரூ. 1000 கோடி படமாக இது இருக்கும் என பல எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், கலவையான விமர்சனங்களையே இந்த படம் பெற்றது.
இதனால் முதல் நான்கு நாட்களை தவிர அதன்பின் வசூல் பெரிதளவில் இல்லை. ஆனால், இந்திய மதிப்பில் ரூ. 500 கோடியை பாக்ஸ் ஆபிசில் கடந்துவிடும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டுமே கூலி இதுவரை இந்திய ரூபாயில் 123 கோடி வசூல் செய்துள்ளது.
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ.175 கோடி வசூல் செய்திருந்த நிலையில், கூலி இதனை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.