விஷ்ணு விஷால் தயாரித்து, நடித்து வரும் படம் ‘ஆர்யன்’. இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. தற்போது இப்படத்தினை அக்டோபரில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். விரைவில் இதனை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளது.
சமீபத்தில் தனது நெருங்கிய நண்பர்களுக்கு ‘ஆர்யன்’ படத்தினை திரையிட்டு காட்டியுள்ளார் விஷ்ணு விஷால். அவர்கள் அனைவருமே படத்தை மிகவும் பாராட்டியிருக்கிறார். அறிமுக இயக்குநர் ப்ரவீன் இயக்கியுள்ள இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக விஷ்ணு சுபாஷ், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
‘ஆர்யன்’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு, செல்லா இயக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஷ்ணு விஷால். இப்படத்தினை வேல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஷ்ணு விஷாலும் தயாரிக்கவுள்ளார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.