17.3 C
Scarborough

U19 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை: 2026 அணிகள் பட்டியல் தயார்

Must read

ஐசிசி U19 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 2026 தொடருக்கான 16 அணிகள் கொண்ட பட்டியலை அமெரிக்கா முழுமையாக வெளியிட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான அணிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது, இதில் 16வது மற்றும் இறுதி அணியாக அமெரிக்கா மாறியுள்ளது.

விக்கெட் கீப்பர்-பேட்டர் அர்ஜுன் மகேஷ் தலைமையிலான அமெரிக்கர்கள், ஜார்ஜியாவின் ரைடலில் சொந்த மண்ணில் இரட்டை சுற்று-ராபின் தகுதிச் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு ஆகஸ்ட் 16 அன்று கனடாவுக்கு எதிராக விளையாடவுள்ள நிலையில் தகுதி பெற்றனர்.

தென்னாப்பிரிக்காவில் 2024 இடம்பெற்ற தொடரில் போட்டியிட்ட முதல் 10 அணிகள் 2026 போட்டிக்கு நேரடியாக தகுதியைப் பெற்றன, அதே போல் முழு உறுப்பினர் அணியான ஜிம்பாப்வேயும் தெரிவானது.

உலகெங்கிலும் உள்ள பிராந்திய தகுதிச் சுற்றுகள் மூலம் இறுதி ஐந்து இடங்கள் தீர்மானிக்கப்பட்டன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article