“நான் முதல் முறையாக RCB ஜெர்ஸி அணிந்தபோது, இப்படியான ஒரு பிணைப்பு உருவாகும் என்று எண்ணியிருக்கவில்லை. இந்த அணி எனது குடும்பமாக மாற்றியது. RCB எனது இதயத்தில் இருக்கிறது. அணி பல தடவைகள் தோல்வியையும், சவால்களையும் சந்தித்தபோது, உங்களின் வார்த்தைகள் எனக்கு ஊக்கமும் மருந்தும் ஆனது.
RCB-ன் உண்மையான ஆன்மா அதன் ரசிகர்களே. உங்களின் அன்பு, நம்பிக்கை, அர்ப்பணிப்பு எல்லாம் எல்லா விதமாகவும் பெருமிதத்தை அளிக்கிறது. உலகில் வேறு எந்த அணிக்குமே இதுப்போன்ற ஒரு விசித்திரமான ரசிகர் பட்டாளம் கிடையாது. உங்களின் அன்பை, நம்பிக்கையை, விசுவாசத்தை நான் என்றும் மறக்கமாட்டேன்.”— முகமது சிராஜ்
(குஜராத் டைடன்ஸ் அணியில் சேர்ந்த பிறகு RCB ரசிகர்களுக்கு உணர்வுடன் கூறிய உரை)