15.1 C
Scarborough

GTI – 6 வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

Must read

ஜி.டி.ஏ. 6 கேமின் வெளியீட்டுத் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தின் கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ கேமின் (Grand Theft Auto) 6ஆவது பதிப்பின் வெளியீட்டுத் திகதியை, அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் வெளியிடப்படும் என்று அந்நிறுவனம் 2013 ஆம் ஆண்டிலேயே அறிவித்திருந்தது.

இருப்பினும், ஒவ்வோர் ஆண்டும் ஜி.டி.ஏ. 6-க்காக அதன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இதனிடையே, 2025 ஆம் ஆண்டில் வெளியிடப்படுவதாய் இருந்த நிலையில், அடுத்தாண்டு மே மாதம் 26 ஆம் திகதியில்தான் ஜி.டி.ஏ. 6 வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து, ரொக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் தெரிவித்ததாவது, “ஜி.டி.ஏ. 6-ன் அறிவிக்கப்பட்ட திகதியைவிட தாமதமாக வெளியிடப்படுவதற்கு வருந்துகிறோம். ஜி.டி.ஏ. 6-ஐ உருவாக்கும்வரையில் ஆதரவு தெரிவித்ததற்கும், பொறுமை காத்ததற்கும் நன்றி.

ரொக்ஸ்டாரின் ஒவ்வொரு விளையாட்டிலும், உங்கள் எதிர்பார்ப்பைக் காட்டிலும் அதிகமாகத் தருவது மட்டுமே எங்கள் குறிக்கோள். அதற்கு ஜி.டி.ஏ. 6-யும் விதிவிலக்கல்ல.

ஆகையால், விளையாட்டின் தரத்தை மேம்படுத்த எங்களுக்கு கூடுதல் நேரம் தேவை. மேற்பட்ட தகவல்களும் தொடர்ந்து பகிரப்படும்’’ என்று கூறினர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article