GTA எனப்படும் முதியோர் தமிழர் அமைப்பின் தமிழர் மரபுத் திங்கள் மற்றும் பொங்கல் விழா கடந்த சனிக்கிழமை அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது.
பணிப்பாளர் ராஜா சிங்கராசா உள்ளிட்ட அமைப்பின் அங்கத்தவர்களினால் இந்த பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவில் ரொரன்டோ சட்ட மன்ற உறுப்பினரும், முதியோருக்கான மூத்த அமைச்சருமான ரேமன்ட் ஷோ இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில், முதியோரின் ஆடல், பாடல் நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன.