கனடாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் Frontline Community Centre இம்முறையும் பொங்கல் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.
Markham and Passmore சந்தியில் அமைந்துள்ள Frontline Community Centre இல் இந்த விழா இன்று 15.01.2025 ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் ஒன்றோரியோ மாகாண முதியோருக்கான மூத்த அமைச்சர் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
ஸ்தாபகரும், நிர்வாக அதிகாரியுமான விஜயா குலா தலைமையிலான ஊழியர்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
தமிழ் கலாசார முறைப்படி ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் பெரும்பாலான முதியவர்கள் கலந்துகொண்டதுடன் அவர்கள் ஆடி, பாடி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
Frontline Community Centre கனடாவிற்கு வரும் புதிய குடிவரவாளர்கள் சம்பந்தமாக ஆலோசனை வழங்குவதுடன் அவர்களுக்கான வழிகாட்டல்களையும் வழங்கி வருகிறது.
குறிப்பாக முதியோதிர் நலன்புரி சேவைகளையும் இந்த மையம் முன்னெடுத்து வருகிறது.