கனடாவின், மார்க்கம் நகரில் முதியோர் நலன்சார்ந்து இயங்கிவரும் Boxgrove Seniors Community Wellness Club அமைப்பின் ”தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் விழா – 2025” கடந்த 15ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றது.
மார்க்கம் நகரில் உள்ள சனசமூக நிலைய மண்டபத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமைப்பின் தலைவி திருமதி சுந்தரேஸ்வரி யோகராஜா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக மாகாண பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி, மார்க்கம் நகரசபை உறுப்பினர் யுனிற்றா நாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பொன்னையா விவேகானந்தன் ‘தமிழ் மரபுத் திங்கள்’ குறித்து சிறப்புரையாற்றியதுடன் தமிழர் கலை, கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.