5.1 C
Scarborough

திண்டாடும் கனடியர்கள் – புதிய கருத்துக்கணிப்பு!

Must read

கனடாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் கனடியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடியர்களில் ஐந்தில் ஒருவர் (20%) கடந்த ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் ஒரு கட்டணத்தை செலுத்தாமல் தவறவிட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

நானோஸ் ரிசர்ச் நிறுவனம் நடத்திய புதிய கருத்துக்கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில், 55 வயதுக்கு குறைவானவர்கள், உணவுக்காக கார் கடன், கிரெடிட் கார்டு அல்லது மின்சார கட்டணங்களை நிலுவையில் வைக்கும் வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மாதாந்த செலவுகள் தொடர்ந்தும் உயர்வடைந்து செல்வதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

18 முதல் 34 வயதுடையோரில் 18.1% பேர் சில சமயங்களில் அல்லது அடிக்கடி கட்டணம் செலுத்தாமல் விட்டதாக கூறியுள்ளனர். 35 முதல் 54 வயதினரிலும் இதேபோல 17.9% பேர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் 55 வயது மேற்பட்டவர்களில் அது வெறும் 4.2% ஆக மட்டுமே இருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article