மார்க்காமில் இரண்டு வாகனங்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் நேற்று இரவு 7:20 மணியளவில் 14வது மற்றும் வார்டன் அவென்யூ பகுதிக்கு அழைக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து சம்பவித்தமைக்கான சூழ்நிலைகள் தற்போது தெளிவாகத் தெரியவில்லை எனவும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

