பதிமூன்றாவது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் இந்தியாவில் இடம் பெற்று வருகின்றது.
இன்று இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் காலை 11 மணிக்கு தொடங்கிய 27வது வீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கட்டுகளை இழந்து தடுமாறியது.
நியூசிலாந்து 168 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனை தொடர்ந்து 169 ஓட்டங்கள் இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 29.2 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அபி ஜோன்ஸ் 86 ஓட்டங்களும் டம்மி ப்யூமாண்ட் 40 ஓட்டங்களும் ஹிதர்நைட் 33 ஓட்டங்களும் எடுத்துள்ளனர்.

