6.6 C
Scarborough

எல்.டி.டி.ஈ உறுப்பினர் தொடர்பில் கனடா பாதுகாப்பு அமைச்சின் அலுவலகம் விசாரணை?

Must read

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக கருதப்படும் ஒருவரின் குடிவரவு விண்ணப்பம் தொடர்பில் கனடா பொது பாதுகாப்பு அமைச்சரான கேரி ஆனந்தசங்கரியின் தொகுதி அலுவலகம் தொடர் விசாரணைகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

நீதிமன்ற ஆவணங்கள் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் கூறுகின்றன.

எவ்வாறாயினும் அமைச்சரின் பேச்சாளர் இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.

அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி பதவிக்கு வருவதற்கு முன்னர் அவரது தொகுதி அலுவலகம் இலங்கையை சேர்ந்த ரஜினி ராஜமனோகரன் என்பவரின் குடிவரவு வழக்கில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை குடிவரவு மற்றும் குடியுரிமை தொடர்பான அதிகாரிகளிடம் அவர் குறித்து விசாரித்துள்ளது.

முன்னதாக ரஜினி ராஜமனோகரன் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்ற அடிப்படையில் கனடாவுக்குள் நுழைய தகுதியற்றவர் என பாதுகாப்பு அதிகாரிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.

அவரது அந்த வழக்கின் தீர்ப்பில் குடிவரவு அதிகாரியின் முடிவை உறுதி செய்து அவர் கனடாவுக்குள் நுழைவதை நீதிமன்றம் நிராகரித்தது. இதன் பின்னரே அமைச்சர் ஆனந்தசங்கரியின் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article