அருங்காட்சியகத்தில் இருந்த நெட்போலியன் மன்னன் மற்றும் அரசி ஆகியோர் பயன்படுத்திய வைர நகைகள் இன்று காலை 9.30 மணியளவில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன .
பிரான்ஸ் நாட்டின் மன்னராக திகழ்ந்தவர் நெப்போலியன் இவர் பல்வேறு நாடுகளை படை எடுத்து தனது ஆட்சியை விரிவு படுத்தினார்.
நெப்போலியன் பயன்படுத்திய ஒன்பது வைர நகைகள் பிரான்ஸ் தலைநகர் பரிசில் உள்ள லவ்ரி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நகைகள் உட்பட பல்வேறு கலைப் பொருட்களை பார்க்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் அருங்காட்சியகத்திலிருந்து நெப்போலியனின் வைர நகைகள் இன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளன வழக்கம்போல சுற்றுலா பயணிகள் பொது மக்கள் பொருட்களை கண்டு களித்துக் கொண்டிருந்தனர்.
இதன்போது உள் நுழைந்த கொள்ளையர்கள் நெப்போலியன் மற்றும் பேரரசியின் வைர நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.
ஒரு நெக்லஸ், ஒரு ப்ரூச் மற்றும் ஒரு தலைப்பாகை உள்ளிட்ட பொருட்களைத் திருடிச் சென்றனர், ஆனால் பெரிய ரீஜண்ட் வைரத்தை எடுத்துச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பில் பொலிஸார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்

