6 C
Scarborough

ஆயுத முனையில் கொள்ளை; சந்தேக நபரின் அடையாளங்களை வெளியிட்டுள்ள அதிகாரிகள்

Must read

டொராண்டோ நகர மையத்தில் உள்ள ஒரு பூங்காவில் வெள்ளிக்கிழமை காலை ஆயுதக் முனையில் இடம்பெற்ற கொள்ளை தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் தேடப்படுகிறார்கள்.

குயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் பெவர்லி ஸ்ட்ரீட் அருகே உள்ள பூங்காவில் இரண்டு சந்தேக நபர்கள் ஒரு நபரை அணுகியதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு சந்தேக நபர்களில், ஒருவர் துப்பாக்கியையும், மற்றவர் கத்தியையும் காட்டி, பாதிக்கப்பட்டவரின் பணப்பையை கோரியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் பணத்தையும் பாதிக்கப்பட்டவரின் பையையும் திருடியதாகக் கூறப்படுகிறது. பின்னர் சந்தேக நபர்கள் சைக்கிள்களில் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேநேரம் நேற்று சனிக்கிழமை, ஒரு சந்தேக நபரை 26 வயது டாரோன் வேலன் என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தமை , துப்பாக்கியுடன் கொள்ளையடித்தமை, மிரட்டல் விடுத்தமை, தடை உத்தரவுக்கு மாறாக துப்பாக்கி வைத்திருந்தமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் மற்றும் நன்னடத்தை உத்தரவை மீறியதாக இரண்டு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

மற்றொரு சந்தேக நபரை அடையாளம் காணவில்லை என்று மை தெரிவித்தனர், அவர் ஒரு கருப்பின ஆண்,எனவும் ஐந்து அடி ஐந்து வயது நடுத்தர உடல் எடை மற்றும் குட்டையான கருப்பு முடி கொண்டவர் எனவும் கடைசியாக சாம்பல் நிற சட்டை மற்றும் கருப்பு பேன்ட் அணிந்திருந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சந்தேக நபர்களின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் 416-808-5200 என்ற எண்ணில் காவல்துறையினரையோ அல்லது 416-222-TIPS (8477) என்ற எண்ணில் குற்றத் தடுப்புப் பிரிவையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article