2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பிய பணம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது என இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
2025 செப்டம்பர் மாதத்தில் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன,இது கடந்த ஆண்டு இதே மாதத்தில்555.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆண்டு கிட்டத்தட்ட 25% வளர்ச்சியைக் குறிக்கிறது.
ஒட்டுமொத்தமாக, ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான தொழிலாளர் அனுப்பிய பணத்தின் பெறுமதி 5,811.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும், இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 4,843.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது – இது சுமார் 20% அதிகரிப்பாகும்.

