ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் வெற்றி கண்டதை அடுத்து காந்தாரா செப்டர் 1 படம் கடந்த 2 ஆம் திகதி வெளியானது.
‘காந்தாரா சாப்டர் I’ படம் வெளியாகி ஒரு வாரத்தில் இந்திய மதிப்பில் ரூ. 509.25 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பாக்ஸ் ஆபீஸில் ஹிட் கொடுத்து வரும் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற பிரம்ம கலாஷா பாடலில் ஒரு காட்சியில் தண்ணீர் கேன் இடம்பெற்றுள்ளது.
இந்த பாடல் காட்சியில் 3 நிமிடம் 6 ஆவது நொடியில் தண்ணீர் கேன் இடம்பெறுவதை ரசிகர்கள் தற்போது கண்டுபிடித்து வைரலாக்கியுள்ளனர்.
இதனைக் கண்ட ரசிகர்கள் 400 ஆண்டுகளுக்கு முந்தைய கதையாக உருவான இப்படத்தில் தண்ணீர் கேன் போட வந்தது யார்? எனக் கிண்டல் செய்து வருகின்றனர். பலரும் இந்த காட்சியை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

