இலங்கையின் வரலாற்றில் முதல்முறையாக நெடுந்தீவில் எரிபொருள் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் உரையாற்றும்போது அவர் இதனை குறிப்பிட்டார்.
கடற்படையின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதுடன் எதிர்காலத்தில் நெடுந்தீவு வாழ் மக்கள் கொழுப்பில் விற்கப்படும் அதே விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது தீவகத்தில் உள்ள மின் பிறப்பாக்கிக்கு எரிபொருளை கொண்டு செல்ல சுமார் 7 மணி நேரம் எடுப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் புதிய எரிபொருள் நிரப்பும் நிலையம் செயல்பட தொடங்கிய பின்னர் 45 நிமிடங்களுக்குள் எரிபொருளை வழங்கக்கூடிய வசதி கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக நிறைவு செய்யப்படும் ,முதல் கட்டத்திற்காக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 50 மில்லியன் ரூபாய் முதலீடு செய்யும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
இதே நேரம் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் வரை மக்கள் சமாதானமாகவும் ஒரே படத்திலும் ஒன்றாக பயணிக்க கூடிய ஒரு காலத்தை இந்த நிர்வாகம் உருவாக்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

