டியூட் கதை ரஜினியை மனதில் வைத்து எழுதிய கதை என இயக்குனர் கீர்த்தீஸ்வரன் தெரிவித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன் மமிதா பைஜூ, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் டியூட்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
இந்த படத்தில் மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளன.
டியூட் குறித்து இயக்குனர் கீர்த்தீஸ்வரன் தெரிவிக்கும்போது பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ்ஸிடம் இந்த கதையை சொன்ன போது அவர்களுக்கு கதை உடனே பிடித்து போனதால் படவேலைகள் தொடங்கினோம்.
இந்த கதையை தொடங்கியபோது ரஜினி சாருக்கு 30 வயது இருந்தால் எப்படி இதில் நடித்திருப்பார் என மனதில் வைத்துத்தான் எழுதினேன். அதில் பிரதீப் பிரகநாதன் பொருந்தி கொண்டிருக்கிறார்.
அவருக்கும் கதை பிடித்து போனதால் ஒத்துக் கொண்டார் ரஜினியும் ஸ்ரீதேவியம் இந்த படத்தில் நடித்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி உருவாகி இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

