இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தேசிய கிரிக்கெட் அணிக்கு இரு முக்கிய பயிற்சியாளர்களை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.
துடுப்பாட்ட பயிற்சியாளராக ஜூலியட் வுட் நியமிக்கப்பட்டுள்ளதுடன் சூழல்பந்துவீச்சு பயிற்சியாளராக ரெனே பெர்டினாண்ட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
துடுப்பாட்டப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலியட் வுட் டின் நியமனம் அக்டோபர் முதலாம் திகதி முதல் ஓர் ஆண்டு காலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
பவர் ஹீட்டிங் திட்டத்தை உருவாக்கியவர் பூட் இவர் துடுப்பாட்ட நுட்பங்களை நவீன பயிற்சி முறைகள் மற்றும் உயிரியக்கவியல் உடன் ஒருங்கிணைந்து வீரர்களின் துடுப்பாட்டத்திறனை அதிகரிக்க செய்வதில் சிறந்தவர்.
இதேவேளை சுழற் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ரெனேவின் நியமனம் செப்டம்பர் 30-ம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.
மணிக்கட்டு மற்றும் விரல் சுழற்பந்து இரண்டிலும் நிபுணத்துவம் பெற்ற இவர் இதற்கு முதல் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

