இந்தோனேசியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 31 தொலைபேசிகளில் உள்ள தகவல் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய குற்ற செயல்களுடன் தொடர்புடைய எந்த ஒரு நபரும் எவ்வித பாகுபாடும் இன்றி கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனது விஜயபால தெரிவித்துள்ளார்.
தற்போது 31 தொலைபேசிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன அவை தொடர்பான அறிக்கைகளும் கிடைத்துள்ளன.
இவற்றுடன் அரசியல்வாதிகள் தொடர்பு பட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் இவர்களுடன் எந்த தொடர்பும் இல்லாதவர்கள் அச்சமடையவோ பதற்றமடையவோ தேவையில்லை மாறாக குற்ற செயல்களுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் ஒரு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

