1.7 C
Scarborough

போராட்டத்தினால் மூடப்பட்ட பிரான்ஸின் ஈபிள் கோபுரம்

Must read

நாடு தழுவிய போராட்டம் காரணமாக பிரான்சில் உள்ள உலகப் புகழ் பெற்ற பிரபல சுற்றுலா தலமான ஈபிள் கோபுரம் கடந்த 2 ஆம் திகதி  மூடப்பட்டது.

இந்த தகவல் தெரியாமல் இதனை பார்வையிட வந்த பலரும் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

பிரான்சில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனை சமாளிக்க வரவு செலவு திட்டத்தில் அரசாங்க செலவினங்கள் குறைக்கப்பட்டன.

அப்போது சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டதாக கூறி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதற்கிடையே நாட்டின் புதிய பிரதமராக செபஸ்டியன் லெகோர்னு நியமிக்கப்பட்டார்.

ஆனால் இவரது நியமனம் போராட்டத்தை மேலும் தூண்டியுள்ளது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் ‘அனைத்தையும் தடுப்போம்’ என்ற இயக்கத்தை தொடங்கி, நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

இதனால் தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் குவிந்தனர்.

இதன் காரணமாக உலகப் புகழ் பெற்ற பிரபல சுற்றுலா தலமான ஈபிள் கோபுரம் மூடப்பட்டது.அது இன்னும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article