ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் புதிய திரைப்பட நிறுவனத்தை தொடங்கிய ரவி மோகன் ‘ப்ரோ கோட்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
இந்த படத்தில் ரவி, எஸ் ஜே சூர்யா ஸ்ரீநாத் மாளவிகா மனோஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் இதற்கு இடையில் டெல்லியை சேர்ந்த மதுபான நிறுவனம் ஒன்று ப்ரோ கோட் டைட்டில் பயன்படுத்தக் கூடாது என்று வழக்கு தொடர்ந்து இருந்தது.
அதில் ப்ரோ கோட் என்பது தங்களது வர்த்தக முத்திரை மற்றும் படத்திற்கு தலைப்பை பயன்படுத்துவதன் மூலம் அவர்களது வர்த்தக உரிமைகளுக்கு சேதம் ஏற்படக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில் நிறுவனத்திற்கு எதிராக ரவி மோகன் ஸ்டுடியோஸ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர் இந்த விசாரணை இன்று மேற்கொள்ளப்பட்டது.
ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் வணிக சின்ன உரிமையை மீறவில்லை என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை ஆராய்ந்த நீதிமன்றம் ,இந்த தலைப்பை பயன்படுத்துவதை தடுக்கக்கூடாது என டெல்லி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

