17 வது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டிக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் முன்னேறியுள்ளன.
இந்த நிலையில் இந்தியாவின் ப்ளெயின் 11 போட்டியாளர்களில் ஆர்ஷ்தீப் சிங் கண்டிப்பாக காணப்பட வேண்டுமென இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் இலங்கையும் மோதி கொண்ட போட்டி சமநிலையில் முடிந்த நிலையில் ஆர்ஷ்தீப் சிங் சூப்பர் ஓவரில் இரண்டு விக்கட்டுகளை எடுத்து அணியின் வெற்றிக்கு காரணமாகி இருந்தார்.
இந்த நிலையில் ஆர்ஷ்தீப் சிங்கை பின்னால் இருக்கும் பெஞ்சில் உட்கார வைக்காது போட்டியில் நிறுத்த வேண்டுமென இர்பான் பதான் கூறியுள்ளார்.

