ஆசியக் கிண்ண டி20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தும் அளவுக்கு தன்னம்பிக்கையும் திறமையும் உள்ளது, ஏனெனில் நாங்கள் சிறப்பான அணி என்று பாகிஸ்தான் கிரிக்கட் அணி தலைவர் சல்மான் ஆகா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி எந்தக் காலத்திலுமே கணிக்க முடியாத ஒரு அணியே. ஒரு போட்டியில் இப்படியெல்லாம் தோற்க முடியுமா என்று ஆச்சரியப்படுவது போல் தோற்பார்கள், பிறகு இப்படியெல்லாம் வெற்றி பெறவும் முடியுமா என்பது போல் ஆச்சரியமான வெற்றியையும் பெறுவார்கள், எப்போது எது நிகழும் என்பது அவர்களுக்கே தெரியாது.
அன்று வங்கதேசத்திற்கு எதிராக வெற்றி பெற்றேயாக வேண்டிய போட்டியில் 5 விக்கெட் இழப்புக்கு 55 ஓட்டங்கள் என்று சரிவு கண்டு, பிறகு அவர்கள் பாஷையில், ‘உலகத்தர ஸ்பின்னர் முகமது நவாஸ்’ பேட்டிங்கிலும் முகமது ஹாரிஸ் பேட்டிங்கிலும் மீண்டும் 135 ரன்களை எட்டியது.இது போன்ற கணிக்க முடியாத சூழலில் ஆகும்.
வங்கதேசம் இந்தியாவுக்கு எதிராக நன்றாக ஆடியது போல் பாகிஸ்தானை வீழ்த்தி விடுவார்கள் என்று பார்த்தால் ஷாஹின் அஃப்ரீடி, ஹாரிஸ் ரவூஃப்பிடம் மடிந்தனர். ஆனால் வங்கதேச பேட்டிங் அன்று கடும் ஐயங்களை எழுப்பியது,
இப்போது அந்தப் போட்டியின் வெற்றியை வைத்து சல்மான் ஆகா, “இப்படி ஒரு போட்டியை வெல்ல முடிகிறது எனும் போது நாங்கள் ஒரு சிறப்பான அணியே. அனைவரும் நன்றாக ஆடினர். பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் தேவை என குறிப்பிட்டுள்ளார்.

