17-வது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடைபெற்ற லீக் மற்றும் சூப்பர்4 சுற்றுகளின் முடிவில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. நாளை நடைபெறும் கிண்ணத்துக்கான இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இதில் நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி லீக் சுற்றில் யுஏஇ. பாகிஸ்தான் மற்றும் ஓமன் அணிகளை வரிசையாக வீழ்த்தியது. இதனையடுத்து நடைபெற்ற சூப்பர்4 சுற்றில் பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.
இந்த சூழலில் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தக்கவைக்கும் முனைப்புடன் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.

