17-வது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் அபுதாபியில் இடம்பெறுகிறது.
அந்தவகையில் ஓமானுடன் நேற்று நடந்த 12-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, ஓமனுடன் (ஏ பிரிவு) மோதியது. இதில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் விக்கட் ஒன்றை கைப்பற்றினார். கைப்பற்றிய விக்கெட்டையும் சேர்த்து அர்ஷ்தீப் சிங் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 100 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இந்த மைல்கல்லை அவர் 64 போட்டிகளில் எட்டியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் பவுலர் ஹாரிஸ் ரவூப்பை (71 போட்டிகள்) பின்னுக்கு தள்ளி அர்ஷ்தீப் சிங் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் ரஷித் கான் 53 போட்டிகளில் 100 விக்கெட்டுக்களை பெற்று முதலிடத்திலும் ஹசரங்க 63 போட்டிகளில் இரண்டாம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.