2026 பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன் ரவி மோகன் நடிப்பில் தயாராகும் பராசக்தி படமும் வரும் என ஏற்கனவே பேசப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அதை உறுதி செய்தனர். பராசக்தி 2026 ஜனவரி 14ம் திகதி வெளியாகிறது.
இதேநேரம் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூர்யாவின் கருப்பு படமும் வெளிவரும் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது கருப்பு திரைப்படத்தை 2026 ஏப்ரல் 14, அதாவது அடுத்த வரும் தமிழ் புத்தாண்டு அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்களாம்.
தளபதி விஜய்யின் ஜனநாயகன், சிவகார்த்திகேயனின் பராசக்தி படங்களை தவிர வேறு எந்த படங்களாவது இனி பொங்கல் ரேஸில் இணையுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.