நியூஸிலாந்து வெலிங்டனில் நடந்த ரக்பி சம்பியன்ஷிப்பில் தென்னாப்பிரிக்காவிடம் 43-10 என்ற கணக்கில் நியூசிலாந்து தோல்வியடைந்த நிலையில் இது வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியாக பதிவாகியுள்ளது.
உலக சம்பியனான தென்னாப்பிரிக்கா ஒரு வாரத்திற்கு முன்பு நியூஸிலாந்திடம் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீண்டு, ஆறு முயற்சிகள் மற்றும் 36 பதிலளிக்கப்படாத இரண்டாம் பாதி புள்ளிகள் உட்பட மிக அற்புதமான திறமையை வெளிப்படுத்தியது.
நியூசிலாந்தின் முந்தைய மிகப்பெரிய தோல்வி 2023 இல் ட்விக்கன்ஹாமில் ஸ்பிரிங்பாக்ஸியுடன் இடம்பெற்ற 35-7 என்ற தோல்வியாகும்.
ரக்பி சம்பியன்ஷிப்பில் அவுஸ்திரேலியா 11 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்தை விட ஒரு புள்ளி முன்னிலையிலும், அர்ஜென்டினாவை விட இரண்டு புள்ளிகள் முன்னிலையிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.