அவென்யூ வீதிக்கு அருகில் ஒரு டேங்கர் லொரி மற்றும் பல வாகனங்கள் மோதியதால் நெடுஞ்சாலை 401 இன் இரு திசைகளிலும் தற்காலிகமாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அவசரகால குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், ஆலன் வீதிக்கும் அவென்யூ வீதிக்கும் இடையிலான அனைத்து பாதைகளும் ஆரம்பத்தில் மூடப்பட்டதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறை (OPP) சமூக ஊடகங்களுக்கு அனுப்பிய பதிவில் தெரிவித்துள்ளது.
எனினும்,சனிக்கிழமை அதிகாலையில், கிழக்கு நோக்கிய பாதைகள் முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டதாகவும், மேற்கு நோக்கிய பாதைகள் மூடப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் “உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லாத” நபர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேநேரம் குறித்த பகுதியைத் போக்குவரத்துக்காக தவிர்க்கவும், தாமதங்கள் ஏற்படலாம் எனவும் முந்னதலாக தெரிவிக்கப்பட்டிருந்தது.